கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். இதுபற்றிய அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேரில் ஆஜராகவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம், ராகுல் காந்தியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் நேரில் ஆஜராகவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கோரியபோது, அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, "ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராக வேண்டும். இல்லையேல், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும்," என உத்தரவிட்டார்.