நடிகை ஜெயப்பிரதாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளதோடு உடனே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் எம்பி நடிகை ஜெயப்ரதா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகை ஜெயப்ரதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என இதுவரை ஏழு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில் கைது வாரண்டும் பிறப்பித்தது.
ஆனால் ஜெயப்பிரதா செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாக இருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்த நிலையில் கோபம் கொண்ட நீதிபதி உடனடியாக ஜெயப்பிரதாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார்.
மேலும் உடனே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.