கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் நடக்க வைத்த வழக்கு: 17 பேருக்கு சிறை தண்டனை

Siva

ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (13:27 IST)
கர்ப்பிணி பெண்ணை  நிர்வாணமாக்கி   நடுத்தெருவில் நடக்க வைத்த 17 பேருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 மாத கர்ப்பிணி பெண்ணை அவரது கணவர் உள்பட 17 பேர் நடுத்தெருவில் நிர்வாணமாக நடக்க வைத்து துன்புறுத்தினர். இதில் மூன்று பெண்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து கர்ப்பிணிப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 17 பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உள்பட 14 ஆண்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் மூன்று பெண்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் கூறிய போது ’இது போன்ற கொடூரமான குற்றம் மணிப்பூரிலும் நடந்தது, இத்தகைய குற்றங்கள் பெண்களுக்கு உணர்ச்சி ரீதியான காயங்களை ஏற்படுத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டிய அவசியம் என்ற கருதப்படும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு பெண்களுக்கு ஆறுதலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டிய நிலையில் கணவர் உள்பட 17 பேர் நடுத்தெருவில் நிர்வாணமாக நடக்க வைத்ததற்கு தகுந்த தீர்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்