நீட் தேவையற்றது! நீட் தேர்வு முறைகேடுகளை மூடிமறைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ், நீட் தேர்வில் வெற்றி பெற்று பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த குஜராத் மாணவி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
குஜராத்தில் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற மாணவி,12-ம் வகுப்பு இயற்பியல், வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
12-ம் வகுப்பு இயற்பியல், வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் இயற்பியல், வேதியியல் பாடங்களை கொண்ட நீட் தேர்வில் மட்டும் எப்படி தேர்ச்சி பெற முடியும்?
இல்லையெனில் சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கும் எதிரான இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர்கல்வி படிப்பிற்கு +2 தகுதித் தேர்வே போதுமானது!