யுடியூப்பில் கலக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த சோகம் - கவலையில் சாப்பாட்டு பிரியர்கள்!

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (15:30 IST)
விதவிதமாக உணவு சமைத்து அதை வீடியோவாக யூ டியூப்பில் வெளியிட்டு உலகம் முழுக்க பிரபலமடைந்த  107 வயதான மஸ்தானம்மா பாட்டி நேற்று காலமானார். 


 
"கண்ட்ரி  ஃபுட்" என்ற யுடியூப்பில் சேனலில் வயதான மூதாட்டி ஒருவர் செய்யும் சமையல் உலகம் முழுவதும் உள்ள மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டவை. இந்த சேனலுக்கு 12 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர் உள்ளனர். 
 
ஆந்திராவை சேர்ந்த காரே மஸ்தானம்மா என்ற பாட்டி தான் அவர். இவர். தனது 11வது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரது 22வது வயதிலேயே இவரது கணவர் எதிர்பாராத விதமாக காலமாகிவிட்டார். அதன் பின் இவர் இவரது குடும்பத்தினரை கவனிக்க துவங்கிவிட்டார். இன்று இவருக்கு கொள்ளு பேரன்கள் எல்லாம் இருக்கின்றனர்.
 
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானம்மா பாட்டி, கண்ட்ரி ஃபுட் யூடியூப் சேனலில் தான் சமைக்கும் அனைத்து வீடியோக்களையும் தனது பேரன் மூலம் பதிவிட்டு வந்தார். 
 
இந்தியாவின் அதிக வயதான முதல் யூடியூபர் மூதாட்டி மஸ்தானம்மா சமீப நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சையில் எடுத்து வந்தார். இருந்து நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். 
 

 
இந்த செய்தியை  அவரின் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரின் இறுதிச் சடங்கும் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
 
கண்ட்ரி ஃபுட் யூடியூப் சேனலில் அவர் பதிவிடும் சமையல் குறிப்புகளுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவரின் விடீயோக்களில் தர்பூசணி சிக்கின், தக்காளி ஆம்லேட் எனப் பல உணவு குறிப்புக்கள் யூடியூபில் வைரல் ஆகி ட்ரெண்டிங்கிலும் வந்தது.
 
உணவுகளை அதிக அளவிலும்,  பலருக்கும் பங்கிடும் வகையில் சமைப்பார்  மஸ்தானம்மா
பாட்டி. அதுவும் வெட்ட வெளியில் அமர்ந்து விறகு அடுப்பில்தான் செய்வார். 
 
தற்பொழுது மஸ்தானம்மா பாட்டி காலமான செய்தி அவரின் ரசிகர்கள்  அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்