டிடிஎஸ் வரியில் ரூ.3,200 கோடி ஊழல்: ஊழியர்களின் உழைப்பில் அடிக்கும் நிறுவனங்கள்...

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (19:55 IST)
எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும், ஊழியர்களிடம் இருந்து டிடிஎஸ் எனப்படும் வரி மாத சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும். இந்த பணத்திலும் ஊழல் மேற்கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
447 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை அரசு கணக்கில் டெபாசிட் செய்யாமல் தங்களது தேவைக்காக பயன்படுத்தி உள்ளன. இதனால் டிடிஎஸ் வரியில் சுமார் ரூ.3,200 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது. 
 
இதில் சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த மோசயில் ஈடுபட்டவர்களின் மேல் மூன்று மாதம் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.
 
இந்த மோசடியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலும் அரசியல் கட்சியினருடன் தொடர்பில் உள்ளவர்கள். திரைப்பட நிறுவனங்கள், கட்டமைப்பு, ஸ்டார்ட் அப் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்