கொரோனா : 13,835 பேர் பாதிப்பு …452 பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (18:45 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. கொரோவைத் தடுக்க இந்திய அரசு வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில்,  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 1766 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை 452 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 1076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்