27 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! – நீட்டிக்கப்படுமா ஊரடங்கு!

திங்கள், 27 ஏப்ரல் 2020 (08:43 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,892 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6,185 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,068 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 3,301 பேரும், டெல்லியில் 2514 பேரும், ராஜஸ்தானில் 2,185 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,082 பேரும், தமிழகத்தில் 1,885 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்