மொத்த எண்ணிக்கை 90,50,598: கொரோனா பாதிப்பு இந்திய நிலவரம்!!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (11:01 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,50,598 ஆக உள்ளது. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. 
 
மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்ட  தகவலின் படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,50,598 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்