10 ஆயிரமாக சரிந்த தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!

செவ்வாய், 9 நவம்பர் 2021 (09:57 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.  
 
இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா 3வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். 
 
இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,126 பேர் பாதிப்புக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா தொற்றில் இருந்து 11,982 பேர் குணமடைந்து விட்டு திரும்பியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்