இந்தியாவில் 3வது அலை கட்டாயம் வரும், ஆனால்...

செவ்வாய், 9 நவம்பர் 2021 (08:38 IST)
இந்தியாவில் கொரோனா 3வது அலை வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது என  ஐஎம்ஏ தேசிய தலைவர் பேட்டி. 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா 3வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, நாட்டில் 3வது அலை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இந்த அலையினால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக குறைவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதோடு கொரோனா வைரசால் ஏற்படக்கூடிய மரபணு மாற்றங்கள் கடந்த சில நாட்களாக ஏற்படவில்லை. எனவே 3வது அலை வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்