14,092 ஆக சரிந்த பாதிப்புகள்; இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (10:35 IST)
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 20 ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது.


கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,092 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,53,464 ஆக உயர்ந்தது. புதிதாக 41 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,037 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றில்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,09,566 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,16,861 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2,07,99,63,555 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 28,01,457  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்