அடுத்த வாரம் முதல் கொரோனா சோதனை கிட்கள் மருந்தகங்களில் கிடைக்கும்!

Webdunia
வியாழன், 20 மே 2021 (18:50 IST)
வீட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் சோதனை கிட்கள் அடுத்த வாரம் முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று இருக்கிறதா என அறிந்த கொள்ள ஆர் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. அதன் முடிவுகள் தெரியவர அதிகபட்சம் 3 நாட்கள் வரை ஆகிறது. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்றை வீட்டில் இருந்தபடியே கண்டுபிடிக்கும் ஹோம் கிட் அறிமுகம் ஆகவுள்ளது.

பூனாவைச் சேர்ந்த மை லேப் சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள கோவி சேஃப் என்ற இந்த கிட் அடுத்த வாரம் முதல் 7 லட்சம் மருந்தகங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மருத்துவர்களின் பரிந்துரை இன்றி வாங்க முடியும். மேலும் சோதனை செய்ய 2 நிமிடமும் முடிவுகளை பெற 15 நிமிடம் மட்டுமே ஆகும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் விலை 250 ரூ இருக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனைக்காக காத்திருப்பதும் முடிவுகளுக்காக சிலநாட்கள் காத்திருப்பதும் குறையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்