மத்திய கூட்டுறவு அமைச்சகம்: மோடி அரசின் புதிய அமைச்சகம் அறிமுகம்

புதன், 7 ஜூலை 2021 (07:52 IST)
மத்திய அரசு கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதிதாக கூட்டுறவு அமைச்சகம் ஒன்று உருவாகி இருப்பதாகவும் இந்த புதிய அமைச்சகம் கூட்டுறவு நிறுவனங்களுக்கான வணிகத்தை எளிதாக்கவும் மாநில கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த புதிய அமைச்சகத்திற்கு விரைவில் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்பதும், புதிதாக அமைக்கப்பட்ட இந்த அமைச்சகத்தின் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்பவர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசம் பஞ்சாப் உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் இருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சிந்தியா உள்பட ஒருசிலருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அன்புமணி மற்றும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்