ஒன்றிய அரசுக்கு 17.25 கோடி ரூபாய் அனுப்பிய நீரவ் மோடியின் சகோதரி!

வெள்ளி, 2 ஜூலை 2021 (10:34 IST)
நீரவ் மோடியின் சகோதரி ஒன்றிய அரசுக்கு 17.25 கோடி ரூபாய் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடினார். பின்னர் அவர் கடந்த ஆண்டு லண்டனில் பிடிபட்ட நிலையில் அவரை லண்டன் போலீசார் கைது செய்து வாண்ட்ஸ்வொர்த்' சிறையில் அடைத்தனர். மேலும் அவரை நாடு கடத்தும் வழக்கு லண்டனில் உள்ள, 'வெஸ்ட் மினிஸ்டர்' மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தன்னை நாடுகடத்துவதற்கு எதிராக அவர் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. இதனால் அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிரவ் மோடியின் சகோதரியான பூர்வி மோடி மற்றும் அவரது கணவர் அப்ரூவராக மாறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அரசுக்கு 17.25 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். இந்த கணக்கு நீரவ் மோடியின் அறிவுறுத்தலால் உருவாக்கப்பட்டது என்றும் அந்த பணம் தங்களுக்கு சொந்தமானது இல்லை என்று கூறியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்