மக்களவை தேர்தல் தொடங்கி முதற்கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. முக்கியமாக வட மாநிலங்களில் பாஜக – காங்கிரஸ் மோதல் வலுவாக உள்ளது. இந்நிலையில் சமீபமாக காங்கிரஸின் அறிக்கையை விமர்சித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதேபோல பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி பிரச்சாரங்களில் பேசியது குறித்தும் பாஜகவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் ராகுல்காந்தி, பிரதமர் மோடி இருவரும் விளக்கம் அளிக்க கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் வாக்குறுதிகள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்க விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க உங்களை சந்திக்கும் நபராக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் பிரதமரான நீங்கள் தவறான கருத்துகளை வெளியிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.