ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த நபர், கடந்த 2013ம் ஆண்டு ரூ.1.07 கோடிக்கு வீடு ஒன்றை புக் செய்துள்ளார். ஒப்பந்தம் போட்ட பிறகுதான் கட்டுமானப் பணிகளே தொடங்கவில்லை என்பது அவருக்கு தெரியவருகிறது.
உடனடியாக கட்டுமான நிறுவனத்திடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர்கள் "வேறு ஒரு வீடு ரெடியாக உள்ளது. அதை வேண்டுமானால் மேலும் ரூ.1.55 கோடி கொடுத்து அதை வாங்கிக்கொள்ளுங்கள்" எனக் கூறி காலம் கடத்தியுள்ளனர்.
பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை தர மறுத்துவிட்டனர். 10 ஆண்டுகளாக வீட்டிற்காக காத்திருந்த இவர், இனியும் வீடு கிடைக்காது என்பதை உணர்ந்து 2022ல் மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.