பாஜகவை தோற்கடிக்க சமீபத்தில் I.N.D.I.A என்ற கூட்டணி உருவானது என்பதும் 26 கட்சிகள் கொன்ற இந்த கூட்டணியின் இரண்டு கட்ட கூட்டம் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் இருக்கும் நிலையில் டெல்லியில் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள காங்கிரஸ் மறுத்துவிட்டதாக தெரிகிறது
பாஜக வேட்பாளருக்கு எதிராகத்தான் எங்கள் கூட்டணி செயல்படும் என்றும் எங்கள் வேட்பாளரை கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு கட்சி ஜெயிப்பதற்கா நாங்கள் கட்சி நடத்துகிறோம் என்றும் ஆம் ஆத்மி கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன