ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறாரா ஒய்.எஸ்.ஷர்மிளா? திடீர் ராஜினாமா ஏன்?

Siva

செவ்வாய், 16 ஜனவரி 2024 (08:09 IST)
சமீபத்தில் ஒய்எஸ் ஷர்மிளா  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் அவர் காங்கிரஸ் தான் கட்சியின் தலைவர் பதவியை விரைவில் ஏற்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அவரது இணைப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் ராஜினாமா கடிதத்தை அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கேவுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது

எனவே ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இன்று அல்லது நாளைக்குள் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்