நான் இந்த சாதிக்காரன்தான்: போட்டுடைத்த ராகுல் காந்தி

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:44 IST)
ராகுல் காந்தி இந்துக்களை ஏமாற்ற பூணல் அணிந்து இருப்பதாக் பாஜக விமர்சித்து வந்த நிலையில் ராகுல் காந்தியின் சாதி அடையாளமும், கோத்திரமும் வெளியே தெரியவந்துள்ளது. 
 
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் கோவிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற ராகுல் காந்தி தனது கோத்திரத்தை அர்ச்சகர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியே கசிந்துள்ளது.   
 
ஆம், ராகுல் காந்தி அர்ச்சகர்களிடம் நான் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிராமணன், எனது கோத்திரம் தத்தாத்ரேயா என கூறியுள்ளார். மேலும், அந்த கோவில் வருகை பதிவேட்டில் ராகுல்காந்தி சில குறிப்புகளை எழுதியுள்ளார். 
 
அதில், நான் ராகுல்காந்தி. ராஜீவ் காந்தியின் மகன். புஷ்கர் கோயிலுக்கு வருகை தந்து பூஜையில் பங்கேற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது குடும்ப பூஜாரி மூலமாக பூஜையை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 
இந்தியா மற்றும் உலகத்தில் அமைதி நிலவ வேண்டும் சகோதரத்துவம் நிலைக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டேன் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
ராகுல் காந்தி இதற்கு முன்னர் நான் ஒரு சிவ பக்தர் என கூறியபோது, பாஜகவின் இந்து வாக்கு வங்கி அரசியலுக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கத்தில், ராகுல் காந்தி தன்னை இந்துவாக காட்டி கொண்டிருக்கிறார் என்ற விமர்சங்களும் முன்வைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்