ஓ இது தான் சாதனையா? ராகுல் காந்தி கலாய் !

திங்கள், 30 மே 2022 (11:05 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான ஒரே சாதனை இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்தது என ராகுல் காந்தி டிவிட். 

 
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2021- 2022 நிதியாண்டில் அனைத்து மதிப்புகளின் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டை விட, 101.9 சதவீதம் ரூபாய் 500, மற்றும் 54.16 சதவீதம் ரூபாய் 2,000 ரூபாய் போலி நோட்டுகள் அதிகம் என ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது.
 
கறுப்புப் பணத்தை ஒழிப்பது மட்டுமின்றி, 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கள்ள நோட்டுகள் ஒழிப்பும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட துரதிஷ்டவசமான ஒரே சாதனை இந்திய பொருளாதாரத்தை மூழ்கடித்தது தான். கள்ளநோட்டுகள் நடமாட்டம் அதிகரித்தது தொடர்பான புள்ளி விவரத்தையும் ட்விட்டர் பக்கத்தில் அவர் இணைத்துள்ளார்.
 
இதே போல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான தெரிக் ஓப்ரயனும் கள்ளநோட்டுகள் அதிகரித்தது குறித்து பிரதமர் மோடியை தமது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். மேலும் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோரும் ரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக் காட்டி மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பலன் வெளிவந்துவிட்டதாக விமர்சித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்