போர்டு ஆலையை டாட்டா எடுக்க ஒப்புதல்!

திங்கள், 30 மே 2022 (09:47 IST)
ஃபோர்டு இந்தியாவின் சனந்தில் உள்ள ஆலையை கையகப்படுத்த குஜராத் அரசு டாடா மோட்டார்ஸுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

 
கடந்த ஆண்டு, ஃபோர்டு நிறுவனம் ஓலா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்த உற்பத்திக்காகவோ அல்லது இரு தொழிற்சாலைகளின் விற்பனைக்காகவோ பேச்சுவார்த்தை நடத்தியது. இது வேலை செய்யாததால் ஆலை மூடல் அறிவிப்புக்கு வழிவகுத்தது.
 
ஃபோர்டு இந்தியாவின் ஆலைகளை கையகப்படுத்துவதற்கு டாடா குழுமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஃபோர்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு இது நடந்தது.
 
ஆம், ஃபோர்டு இந்தியாவின் சனந்தில் உள்ள ஆலையை கையகப்படுத்த குஜராத் அரசு டாடா மோட்டார்ஸுக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான தடையில்லா சான்றிதழை மாநில அமைச்சரவை வழங்கியுள்ளது. மேலும், ஃபோர்டு இந்தியாவுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து அனுபவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டாடா மோட்டார்ஸ் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துடன் தொழிலாளர் மற்றும் நிதி விவகாரங்கள் உட்பட ஆலை தொடர்பான சிக்கல்களை சரி செய்த பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்