அமலாக்கததுறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற கவிதா.. புனையப்பட்ட வழக்கு என மனுதாக்கல்..!

Siva

செவ்வாய், 19 மார்ச் 2024 (07:20 IST)
முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா என்பவர் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது கைது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
டெல்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் தெலுங்கானா முதல்வர் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா ஹைதராபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
இந்த நிலையில் தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், இது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக புனையப்பட்ட வழக்கு என்றும் உச்சநீதிமன்றத்தில் கவிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: கூட்டணி பணிகள் நிறைவு.. முதல் நபராக பிரச்சாரத்திற்கு கிளம்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..! 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்