ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு கிடைத்த நஷ்ட ஈடு
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (12:54 IST)
இந்திய ரயில்வே ஆரம்பித்து 150 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் முதல் முறையாக ஒரு ரயில் தாமதமாக சென்றதற்காக அந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டுள்ளது
லக்னோவில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் தேஜஸ் ரயிலில் 450 பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு பக்கமும் அந்த ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வருவது வருவது தெரியவந்தது
இதனை அடுத்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் பயணிகள் அனைவரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார்
அதில் தேஜஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததை அடுத்து ஒவ்வொருவருக்கும் ரூபாய் 250 நஷ்ட ஈடு கொடுக்கப்படுவதாகவும் இந்த நஷ்ட ஈட்டை மொபைலில் அனுப்பப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்து அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
150 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக ஒரு ரயில் தாமதமாக செல்வதற்கு நஷ்டயீடு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது