வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

செவ்வாய், 1 நவம்பர் 2022 (07:57 IST)
ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதும் அந்த மாற்றம் குறித்த அறிவிப்பு ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை மட்டும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 116.50 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2009 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.116.50 குறைந்ததன் காரணமாக ரூ.1893 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப் பட்டபோது வணிகர்களால் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது சிலிண்டர் விலை குறைப்பால் விலை குறைவு இல்லை என்பதால் பொதுமக்களுக்கு இந்த விலை குறைப்பால் எந்த வித லாபமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்