பெங்களூரில் மீண்டும் கல்லூரி மாணவி கொலை!

புதன், 18 ஜனவரி 2023 (20:30 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த  பெண் ஒருவர் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பெண், கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

பெங்களூர் நகரைச் சேர்ந்த 20 வயது மாணவி ராஷி. இவர், ஒரு கல்லூரியில் படித்து வந்த நிலையில், மாலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அதேசாலையில் வந்த 2 இளைஞர்கள் பேர் அந்த மாணவியை திடீரென்று அரிவாளால் சரமாறியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

மாணவி சம்பவ இடத்தில் சரிந்து விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

.ALSO READ: துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: காதலருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

மாணவியைக் கொன்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்