லடாக் பகுதியில் இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி சீன ராணுவம் அராஜகம்!!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (15:58 IST)
ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்தியா- சீனா எல்லையில் கடந்த சில மாதங்களாக போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், சீன ராணுவம் லடாக் பகுதியில் உள்ள பாங்கொங் ஏரி வழியாக ஊடுருவ முயன்றுள்ளது. 
 
இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதால், சீனா ஊடுருவ முயற்சிப்பதை கண்ட இந்திய ராணுவ வீரர்கள்  மனித சங்கிலி அமைத்து சீனாவின் ஊடுருவலை முறியடித்தனர். 
 
இதனால் ஆத்திரமடைந்த சீன ராணுவத்தினர் கற்களை வீசி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இறுதியில் சீன ராணுவத்தினர் அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டனர். 
அடுத்த கட்டுரையில்