நாளை முதல் 12 -14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி!!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (13:46 IST)
நாளை முதல் இந்தியா முழுவதும் 12 -14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

 
கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
 
12 - 14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து விரைவில் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 12 -14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
 
மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் எனவும் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்