நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Sinoj

வியாழன், 28 மார்ச் 2024 (14:50 IST)
டெல்லி நீதிமன்றத்தில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. 
 
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், ‘கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி ’செய்தனர்.
 
இந்த நிலையில்  டெல்லி நீதிமன்றத்தில் இன்று முதல்வர் கெஜ்ரிவால் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பப்பட்ட நிலையில்  தனிப்பட்ட முறையில் பல முக்கிய விஷயங்களை பேசி வருகிறார்.
 
ஆம் ஆத்மி கட்சியை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற இலக்கை கொண்டு அமலாக்கத்துறை செயல்படுவதாக நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டிற்கு அமலாக்கத்துறை மூத்த வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்