இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கட்டாய நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால பாதுகாப்பை வழங்க உயர்நீதிமன்றம் முன்பு மறுத்துவிட்டது என்பதை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.