பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமே இருக்காது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj

சனி, 23 மார்ச் 2024 (19:35 IST)
ஏழை எளிய மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக  உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், சமீபத்தில் தொகுதிப் பங்கீடுகள் கையெழுத்தாகின. நேற்று திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
 
இந்த நிலையில் இன்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமே  இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திருவாரூர் மற்றும்  நாகை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில்,  இன்று நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர்,

''2019 நாடாளுமன்ற தேர்தல்   நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு  விழாவிற்கு வந்த பிரதமர் மோடி பட்டின் அழுத்தியபோது பக்கத்தில் நின்று கைதட்டினீர்களே பழனிசாமி....அதற்குப்பின் எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என ஒருமுறையாவது ஒன்றிய அரசின் கதவைத் தட்டினீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும், கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கு வாக்கு கேட்டு உங்கள் வீட்டு பிள்ளையாகிய இந்த ஸ்டாலின் வந்துள்ளேன். 
 
நடைபெற இருக்கிற தேர்தல் முக்கியமான தேர்தல். இந்திய ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல் இது. ஏழை எளிய மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்