இந்த நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பதால் ஐயப்பனை தரிசனம் செய்ய பல பெண்கள் மாலையணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள நிலக்கல்லில் போராட்டக்காரர்கள் நின்று கொண்டு பம்பை செல்லும் பெண்களை தடுத்து வருகின்றனர். பேருந்து மற்றும் கார்களில் பெண்கள் இருந்தால் அவர்களை இறங்கிவிடும்படி கட்டாயப்படுத்துவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.