அண்டை மாநிலமான கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை தினமும் 10,000க்கும் மேல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் வாளையாறு உள்பட 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், கேரளத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்று அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு - கேரளா எல்லைகளில் வாகன சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.