யுபிஎஸ்சி தேர்வில் பெயில் ஆன ChatGPT .. 100க்கு 54 மதிப்பெண்கள் மட்டுமே!

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (12:10 IST)
யுபிஎஸ்சி தேர்வில் பெயில் ஆன ChatGPT .. 100க்கு 54 மதிப்பெண்கள் மட்டுமே!
ChatGPT என்ற தொழில் நுட்பம் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவி வரும் நிலையில் ChatGPT மூலம் யுபிஎஸ்சி தேர்வில் கூட வெற்றி பெற முடியவில்லை என்று வெளியான தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் இது பயனர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதன் தெரிந்ததே. மனிதனைப் போலவே இந்த ChatGPT திறமையானது என்று கூறப்படும் நிலையில் இதன் திறமையை சோதனை செய்ய யுபிஎஸ்சி தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு 54 கேள்விகளுக்கு மட்டுமே ChatGPT சரியான பதிலை கூறி உள்ளது என்றும் இதில் கட் ஆப் மார்க் அடிப்படையில் பார்த்தால் ChatGPT இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்றும் தெரியவந்துள்ளது. 
 
உலகில் கோடிக்கணக்கான மக்கள் இந்த ChatGPT செயலியை பயன்படுத்தியதால் குறைந்த காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமான நிலையில் அந்த செயலியால் யுபிஎஸ்சி தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் எம்பிஏ இறுதி தேர்வில் ChatGPT தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்