முதல் சுற்றுப்பாதையில் இருந்து உயர்ந்த சந்திரயான் 3! – இஸ்ரோ கொடுத்த அப்டேட்!

ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:10 IST)
இஸ்ரோ நிலவு பயணத்திற்காக விண்ணில் ஏவிய சந்திரயான் 3 வெற்றிகரமாக முதல் சுற்றுவட்ட பாதையை தாண்டியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.



இஸ்ரோவின் நிலவு ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் திட்டன்படி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கடைசி நொடியில் தரையிறங்கும்போது சந்திரயான் 2 தொடர்பை இழந்து தோல்வியை அடைந்தது.

சந்திரயான் 2வில் இருந்த பிரச்சினைகளை சரிசெய்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க செய்யும் வகையில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தண்ணீர் குறித்து ஆய்வு செய்ய உள்ள சந்திரயான் 3 தற்போது பூமியிலிருந்து கிளம்பி பூமியை சுற்றி வந்து தனது முதல் சுற்று வட்ட பாதையிலிருந்து அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளதாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்