சாய்ந்த நிலையில் விக்ரம் லேண்டர்: அடுத்து என்ன? இஸ்ரோ பரபரப்பு தகவல்!

திங்கள், 9 செப்டம்பர் 2019 (15:51 IST)
நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் இருப்பதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விக்ரம் லேண்டர் என்ன ஆனது? என்ற பதற்றம் அனைவரிடமும் தொற்றிக்கொண்டது. 
 
இந்நிலையில் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் இமேஜில் இருந்து நேற்று விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டரை நிலவின் 100 கிமீ சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50 கிமீ தூரமாக குறைத்து விக்ரம் லேண்டரை பற்றிய தகவலை பெற இஸ்ரோ திட்டமிட்டது. 
அதன்படி, தகவல் வெளியாகியுள்ளது. ஆம், கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர் உடையவில்லை. ஆனால், லேசாக சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
அதோடு, நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்