சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்ட 12 வயது சிறுமி கற்பழிப்பு!

புதன், 16 ஆகஸ்ட் 2017 (12:46 IST)
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய 12 வயது சிறுமி மர்ம நபரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் காலை சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றிவிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு பின்னர் விடுமுறை வழங்கப்படும். அதே போல நேற்று சண்டிகரில் உள்ள செக்‌ஷன் 13 என்ற பகுதியில் உள்ள பள்ளியிலும் காலை கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த விழாவுக்கு பல முக்கிய காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அந்த பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயதான சிறுமியும் வந்தார். சுதந்திர தின விழா கொடியேற்றுதல் முடிந்த பின்னர் அந்த சிறுமி 1.5 கி.மீ தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
 
அந்த சிறுமி வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள பூங்க ஒன்றிற்கு அருகில் செல்லும் போது மர்ம நபர் ஒருவாரால் பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அந்த சிறுமி வீட்டிற்கு அழுதுகொண்டே சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
 
இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் உடனடியாக பள்ளியில் இருந்து சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை சந்தித்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை கற்பழித்த மர்ம நபர் 40 வயது உடையவர் என்பது தெரியவந்துள்ளது. சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு வந்த சிறுமி கற்பழிக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்