வினோத நோய் தாக்கம்; 12 அங்குல நீளவிரல்கள்: ஒதுக்கப்படும் சிறுவன்!!
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (10:28 IST)
உத்தரப்பிரதேசத்தில் வினோத நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனை அந்த கிராமமே ஒதுக்கியுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவன் டாரிக். பிறக்கும் போதே ஒரு நோயின் காரணமாக சாதாரணமான மனிதனை விடப் பெரிய கை விரல்களைக் கொண்டு பிறந்துள்ளார்.
அவரது கைகள் தற்போது 12 அங்குலத்திற்கு நீண்டுள்ளது. சிறு வயதிலிருந்து சிகிச்சை எடுத்து வந்தவர், பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாகச் சிகிச்சையை நிறுத்தியுள்ளார்.
குளிப்பது, உடை மாற்றுவது மற்றும் சாப்பிடுவது போன்ற தினசரி பணிகளை செய்ய அவரின் சகோதரர் உதவியை நாடுகிறார்.
ஆனால் இதில் கொடுமை என்னவெனில், விரல்கள் பெரிதாக இருப்பதால் பள்ளியில் படிக்க அனுமதிக்கவில்லை. கிராம மக்களும் அந்த சிறுவனை ஒதுக்கி வைக்கின்றனர்.