மாநிலங்கள்தோறும் மாநில பாடத்திட்டங்கள் , மத்திய பாடத்திட்டங்கள் மற்றும் வேறு சில பாடத்திட்டங்கள் கொண்ட பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் படிக்கும் மாணவர்கள் பலர் மத்திய பல்கலைகழகத்தில் பட்டப்படிப்புகள் சேர விண்ணப்பிக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார், நடப்பு ஆண்டு முதல் இந்த நுழைவு தேர்வு நடைபெறும் என்றும், நாட்டில் 100க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில், 13 மொழிகளில் தேர்வு எழுத முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.