வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக ஆலோசனை! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதன், 24 நவம்பர் 2021 (15:47 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான ஆலோசனையில் மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி இந்த சட்டம் திரும்ப பெறப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் முறைப்படி சட்டம் ரத்து செய்யப்படும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகல் தெரிவித்துள்ளனர், இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவசாய சட்டங்களை திரும்ப பெறுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சட்டத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்