9 துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமாகியுள்ளது… மத்திய தொழிலாளர்கள் அமைச்சகம் ஆய்வு!

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:51 IST)
இந்தியாவில் 9 துறைகளில் 29 சதவீதம் வேலைவாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக மத்திய தொழிலாளர்கள் அமைச்சகம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல லட்சக் கணக்கானோர் வேலை இழந்ததால் இப்போது மேலும் அது அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் நடத்திய ஆய்வில் 9 துறைகளில் 29 சதவீதம் வேலை வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அந்த 9 துறைகளாக உற்பத்தி, கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், உணவகங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச்சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவானது 2013-2014 ஆண்டு புள்ளி விவரங்களோடு ஒப்பிடப்பட்டு இந்த முடிவு வெளியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்