5 அடுக்கு தடுப்பு நடவடிக்கை - கேரளாவுக்கு மத்திய அரசு பரிந்துரை

சனி, 28 ஆகஸ்ட் 2021 (10:21 IST)
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அடுக்கு தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு அறிவிறுத்தல். 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவில் தொடர்ந்து 3 வது நாளாக இன்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கு மேல் கேரளாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அடுக்கு தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். 
 
அதில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று கண்காணித்தல், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், முழு வீச்சில் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்