மொத்தமாக சிம்கார்டு விற்பனை செய்வது ரத்து: மத்திய அரசு அதிரடி..!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (08:01 IST)
ஒரு நிறுவனம் அல்லது குழுவினர்களுக்கு மொத்தமாக சிம்கார்டுகள் வழங்குவது அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
சிம்கார்டு விற்பனை செய்பவர்களின் விவரங்கள் போலீஸ் மூலம் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் மொத்தமாக சிம்கார்டு விற்பனை செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் சிம் கார்டு மூலம் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  
 
விதிமுறைகளை மீறி சிம்காடுகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவ்வாறு விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
மொத்தமாக சிம்கார்டுகள் விற்பனை செய்வதன் மூலம் தவறான  சம்பவத்திற்கு காரணமாகிறது என பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்