மீண்டும் சிஏஏ சட்டத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு: போராட்டம் வெடிக்குமா?
செவ்வாய், 8 நவம்பர் 2022 (20:00 IST)
மீண்டும் சிஏஏ சட்டத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு: போராட்டம் வெடிக்குமா?
மீண்டும் சிஏஏ சட்டத்தை கையில் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தேசிய மக்கள் தொகை பதிவேடான என்.ஆர்.பி கணக்கெடுப்பை ஒவ்வொரு குடும்பத்திலும் எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் சிஏஏ என்பது கருணையான முற்போக்கான ஒரு சட்டம் என்றும் இது இந்திய குடி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இந்திய குடிமகனின் உரிமையை பாதிக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது
மேலும் வங்கதேசம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டுக்குள் வந்தவர்களுக்கு எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது
ஆனால் இந்த கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிஏஏ கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது