விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம்: அமைச்சர் பொன்முடி

வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:12 IST)
ஒருபக்கம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் விருப்பப்படுபவர்கள் இந்தி கற்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாகவும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திமுக மட்டுமன்றி அதன் கூட்டணி கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இந்தியைப் புகுத்தி அதில் பாடத்தை படிக்க வேண்டுமென்றால் இங்கு பலருக்கும் இந்தி புரியாது. இதற்காக இந்தி பேசும் மாநிலங்களில் இருந்துதான் ஆட்களை இறக்குமதி செய்து கற்றுக் கொடுக்க வேண்டும் 
 
நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தியை கற்றுக் கொள்ள விருப்பப்படுபவர்கள் தாராளமாக இந்தியை கற்கலாம். ஆனால் ஹிந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்றால் அதை ஏற்க மாட்டோம் என்று பேசியுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்