ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை! – மத்திய அரசு அதிரடி!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (15:34 IST)
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வரும் நிலையில் சூதாட்ட விளம்பரத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு சிறப்பு குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு செயலிகளின் விளம்பரத்தை டிவி சேனல்கள், வலைதளங்கள், மின்னனு ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. தற்போது விளம்பரத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் செயலிகளுக்கும் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்