நாடு முழுவதும் மாணவர்களுக்கு ’ஒரே நாடு ஒரே ஐடி’ அட்டை: இணையதளம் அறிவிப்பு..!

திங்கள், 6 நவம்பர் 2023 (11:19 IST)
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில் தற்போது அது குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை போலவே நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அட்டையில் மாணவர்களுக்கு தனித்துவமான ஐடி இருக்கும் என்றும் அதனை ஸ்கேன் செய்தால் மாணவர்களின் கல்வி பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Automated Permanent Academic Account Registry (APPAR) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த அட்டை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு   வழங்கப்படும். இந்த அட்டை பள்ளியில் இருந்து கல்லூரிகளுக்கு மாறுவதை எளிமையாக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த முழு தகவல்களை தெரிந்து கொள்ள https://www.abc.gov.in/ என்ற  இணையதளத்தை பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்