திருடு போன செல்போனை ஈஸியா கண்டுபிடிக்கலாம்! – மத்திய அரசின் புதிய ப்ளான்!

செவ்வாய், 16 மே 2023 (10:49 IST)
இந்தியாவில் திருடு போன செல்போன்களை எளிதில் கண்டுபிடிப்பதற்கான புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

நாடு முழுவதும் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் அவசியமான ஒரு சாதனமாக ஸ்மார்ட்போன்கள் மாறியுள்ளது. பெரும் விலையிலான ஸ்மார்ட்போன்களை பலர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் அவை திருடப்பட்டு கள்ள சந்தையில் விற்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில்தான் காணாமல் போன செல்போன் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிப்பதற்கான ஒரு புதிய வலைதளத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. ‘சஞ்சார் சாத்தி’ என்ற இந்த வலைதளம் மூலம் செல்போனின் IMEI நம்பரை பயன்படுத்தி அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்திற்குள் சென்று மொபைல் எண், ஸ்மார்ட்போன் IMEI எண், மாடல், காணாமல் போன பகுதி குறித்த விவரம், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் புகார் எண் மற்றும் அதன் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். அதன்பின் மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ உள்ளீடு செய்து சமர்பித்தால் ஸ்மார்ட்போன் எங்கிருந்தாலும் அதை ப்ளாக் செய்ய முடியும். அதன் இருப்பிடத்தை கண்டறியவும் முடியும். ஸ்மார்ட்போனை மீட்ட பிறகு அதை இதே தளத்தில் சென்று அன்ப்ளாக்கும் செய்து கொள்ள முடியும்.

இந்த வலைதளம் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும், ஸ்மார்ட்போன் திருட்டுகளை தடுக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்