இந்தியா முழுவதும் வீட்டு மின்சாரம், விவசாய மின் இணைப்புகள் ஆகியவற்றுக்கான புதிய வழிமுறைகளின்படி, விவசாய மின் இணைப்பிற்கும் இனி கட்டாயம் மின் மீட்டர் பொருத்த வேண்டும்.
மேலும் மின் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் ஆன்லைன் மூலமாக மட்டுமே தொகையை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டால் நிறுத்தப்படுவதற்கு முன்பாக குறுஞ்செய்தி அல்லது உள்ளூர் ஊடகங்கள் மூலமாக மின் நிறுத்தம், மீண்டும் மின்சாரம் எப்போது வரும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.