ரிலையன்ஸ்- டிஸ்னி இணைப்புக்கு அனுமதி.. அடுத்தது என்ன?

Mahendran

புதன், 28 ஆகஸ்ட் 2024 (18:12 IST)
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்களின் இணைப்புக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் சிசிஏ அனுமதி வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் ரிலையன்ஸ், டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து 120 டிவி சேனல்களை வைத்து உள்ள நிலையில் இந்த இரு நிறுவனங்கள் இணைப்பு மூலம் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய பலம் வாய்ந்த நிறுவனமாக மாறி உள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனங்களின் இணைப்பு குறித்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தற்போது சிசிஐ இந்த இணைப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இணைப்பின் மூலம் 8.5 பில்லியன் டாலர் நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இந்த கூட்டு நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 63% பங்குகள், டிஸ்னிக்கு 37 சதவீத பங்குகள் பெற இருக்கின்றன. இந்த புதிய நிறுவனத்திற்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தலைவராக செயல்பட உள்ளார் என்பதும் டிஸ்னியின் உதய் சங்கர் என்பவர் உதவி தலைவராகவும் ஆலோசகராகவும் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்